கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்; புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி


கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்; புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 March 2021 10:06 PM GMT (Updated: 25 March 2021 10:06 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று புதிதாக 33 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று புதிதாக 33 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
தொற்று அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அபராதம்
மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200-ம், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது.
எனினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது.
33 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 172 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 865 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 150 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 157 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story