சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.301-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.301-க்கு ஏலம்
x
தினத்தந்தி 25 March 2021 10:13 PM GMT (Updated: 25 March 2021 10:13 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.301-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூ மார்க்கெட் நடைபெற்றது. 
நேற்று நடந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ  ஒன்று ரூ.301-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.140-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், பட்டுப்பூ ரூ.61-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.325-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

Next Story