53 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


53 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 March 2021 4:01 AM IST (Updated: 26 March 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு 
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஆண்டு ஆகியும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையில். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலும் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 50-ஐ நெருங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டத்தில் போடப்பட்டு வருகிறது.
 தடுப்பூசி 
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
மாவட்டத்தில் உடுமலை, அவினாசி, தாராபுரம் உள்பட 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை, 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தடுப்பூசி போடும் பணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, டாக்டர் பாரதி, ரத்த வங்கி டாக்டர் பிரியா உள்பட பலர் பார்வையிட்டனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 53 ஆயிரத்து 302 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 24 ஆயிரம் டோஸ் மருந்தும் கையிருப்பு உள்ளது. இதில் 4 ஆயிரம் டோஸ் கோவேக்சினும், 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முககவசம் 
இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இதுபோல் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களும் முதல் தடுப்பூசி செலுத்திய நாளில் இருந்து 28 நாட்களுக்கு பிறகு கட்டாயம் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்படும் வரை சுகாதாரத்துறை அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story