கோபி பகுதியில் முக கவசம் அணியாத 18 பேருக்கு ரூ.3,600 அபராதம்


கோபி பகுதியில் முக கவசம் அணியாத 18 பேருக்கு ரூ.3,600 அபராதம்
x
தினத்தந்தி 26 March 2021 4:03 AM IST (Updated: 26 March 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் முக கவசம் அணியாத 18 பேருக்கு ரூ.3 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

கோபி
கோபி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமசாமி உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் சோலைராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், தூய்மை பாரத திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழு கோபியில் கடை வீதி, அனுமந்தராயன் கோவில் வீதி, கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது முக கவசம் அணியாமல் வந்த 18 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.

Next Story