கவுந்தப்பாடியில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடியில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நாட்டு சர்க்கரையை 1,698 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 220-க்கும், அதிபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 280-க்கும் என மொத்தம் ரூ.37 லட்சத்து 97 ஆயிரத்து 355-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story