வேலகவுண்டம்பட்டி அருகே, முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


வேலகவுண்டம்பட்டி அருகே, முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 26 March 2021 4:23 AM IST (Updated: 26 March 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே, முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
முதியோர் உதவித்தொகை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி வசந்தி (வயது 41). இவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். 
இந்தநிலையில் மானத்தியை சேர்ந்த சுகுமாரன் (72) என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வசந்தி கேட்டாராம். 
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமாரன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். 
அதன்படி நேற்று சுகுமார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம்‌ ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வசந்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை பெற கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story