சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை


சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 March 2021 4:35 AM IST (Updated: 26 March 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகின்றார்.

சேலம்:
சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகின்றார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பெண் தற்கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டி மதுரை வீரன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் கட்டிட சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சேலம் 3 ரோடு அருகே உள்ள கொடிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பவித்ரா (வயது 19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் பவித்ரா தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பவித்ராவின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பவித்ராவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் பவித்ராவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் இது குறித்து உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story