நூல் விலை குறையுமா என தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ஏப்ரல் மாதம் நூல் விலை குறையுமா என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர்
ஏப்ரல் மாதம் நூல் விலை குறையுமா என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
பின்னலாடை தயாரிப்பிற்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் ஆர்டர்களை பெறும் போது அப்போது இருக்கிற மூலப்பொருட்களின் விலையின்படி விலையை நிர்ணயிப்பார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக தொழில்துறையினர் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை அனுப்ப முடியவில்லை.
உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இதுபோல் ஏராளமான ஆர்டர்களும் ரத்தாகி வந்து கொண்டிருக்கிறது. இதனால் நூல் விலையை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதற்கு மாறாக நூல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் நூல் விலை குறையுமா? என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
நூல் விலை குறையுமா
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது
நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருப்பூரில் பின்னலாடை தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தொழில்துறையினர் நூற்பாலைகள் நூல் விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ந்து நூல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்திய பருத்தி கழகம் கேண்டிக்கு ரூ.1500 குறைத்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் நூல் விலை குறையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இன்னும் 5 நாட்களில் நூற்பாலைகள் நூல் விலைகளை வெளியிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story