குளித்தலை தொகுதியில் மக்களின் நலனுக்காக முழுமையாக கடமையாற்றுவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகர் வாக்குறுதி


அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரிக்கும்போது
x
அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரிக்கும்போது
தினத்தந்தி 26 March 2021 7:00 AM IST (Updated: 26 March 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகர் வாக்கு சேகரித்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் என்.ஆர்.சந்திரசேகர் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பொருந்தலூர், பாதிரிப்பட்டி, கல்லடை ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள சுமார் 35-&க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நடந்து சென்றும், திறந்த வேனில் நின்றும் பொது மக்களிடம் நேற்று வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண்கள் பலர் அவருக்கு ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர் பொது மக்கள் முன்னிலையில் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் தொடர அனைவரும் 
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் நலனுக்காக முழுமையாக கடமை ஆற்றுவேன். அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு நல்ல பல திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
சொன்னதை செய்யும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைய அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். 

மேலும் அவர் சென்ற பகுதிகளில் 100 நாள் திட்டத்தில் பணிசெய்து கொண்டு இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story