மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்; மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பேச்சு


தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்த போது
x
தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்த போது
தினத்தந்தி 26 March 2021 9:45 AM IST (Updated: 26 March 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி குணசீலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று குணசீலம், மஞ்சக்கோரை, கல்லூர், வேப்பந்துறை, மணப்பாளையம், காந்திநகர், கருப்பம்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். குணசீலம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், அங்குள்ள வெங்கடாஜலபதி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை தொடங்கினார். குணசீலம் ஊராட்சிக்குட்பட்ட மதுரை காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். 

பிரசாரத்தை தொடங்கும் முன்பாக  தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பலூன்களை பறக்கவிட்டார். மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது பொதுமக்களுடன் பஸ்சில் பயணம் செய்து வாக்குகளை சேகரித்தார். பொதுமக்களின் அடிப்படை கோரிக்கை உள்ளிட்டவற்றை உடனடியாக செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். வாய்க்கால் அமைப்பது தொடர்பான முக்கொம்பு மேலணையில் இருந்து வடக்கில் 3 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை சித்தாம்பூர், சோழிங்கநல்லூர், கோமங்கலம், நெய்வேலி, திருத்தியமலை, பேரூர், திருத்தலையூர் ஏரிகள் உள்ளன. அவற்றுக்கான நீராதாரங்களைச் சரி செய்து, இந்த ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் எனவே பொதுமக்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதில் முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் வளர்மதி, ஊராட்சி தலைவர்கள்,  நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர் சரவணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story