புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்


புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 26 March 2021 11:59 AM IST (Updated: 26 March 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி, தமிழக சட்டமன்றங் களுக்கு அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். “உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;-

* சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்படும்.

* தொழில், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் செயல்பாட்டை உறுதிசெய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

* அனைத்து பஞ்சாலைகளும், கூட்டுறவு மில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்.

* புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கடும்.

* விண்ணப்பித்த 15 நாள்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். 

* புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்.

* எந்த ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும் அரசால் நிர்வாகிக்கப்படாது.

Next Story