உடன்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கோலமிடுதல் நிகழ்ச்சி
உடன்குடியில் வாக்காளர விழிப்புணர்வு கோலமிடுதல் நிகழ்ச்சி நடந்தது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலமிடுதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதையொட்டி உடன்குடி பேரூராட்சி முன்பு ஏராளமான. பெண்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம், மக்களின் ஜனநாயகக் கடமை, வாக்களிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாண்மை அலுவலர்கள் விக்ரமசிங், சேர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பெண்கள் மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story