விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மீனவ சங்க தலைவர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சேராஜா, எமரிட், சகாயம், மகத்துவம் எடிசன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாமதமாகும் பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மீனவர்கள் புறக்கணிப்பது மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story