பெங்களூருவில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது
பெங்களூருவில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி:
பெங்களூருவில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவமாதா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த பஸ்சில் சந்தேகப்படும் வகையில் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.
இதில் அவர்கள், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 65), சடையப்பன் (60), காளிமுத்து (40), ராமலிங்கம் (42) என்பதும், மதுபாட்டில்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 780 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story