கொடைக்கானல் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு


கொடைக்கானல் அருகே  கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 26 March 2021 9:11 PM IST (Updated: 26 March 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல் மற்றும் திருவள்ளூர் நகர் பகுதியில் டால்பின் நோஸ் என்ற சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்ய வேண்டும், குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், கீழ்குண்டாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை வட்டக்கானல் பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும், புதிதாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், டால்பின்நோஸ் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வாகனநிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். எனவே பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story