மகளை காப்பாற்ற முயன்ற பெண் பலி


மகளை காப்பாற்ற முயன்ற பெண் பலி
x
தினத்தந்தி 26 March 2021 9:43 PM IST (Updated: 26 March 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே கல்குவாரி குட்டையில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற பெண் நீரில் மூழ்கி பலியானார்.

தேனி:
வருசநாடு அருகே தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி குமுதா (வயது 54). 

இவர்களுக்கு நந்தினி (32) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை குமுதா, தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்றார். 

அப்போது தோட்டம் அருகே பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை குடத்தில் எடுக்க நந்தினி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக குட்ைடயில் அவர் தவறி விழுந்தார். 

உடனே அவரை காப்பாற்றுவதற்காக சென்ற குமுதாவும் தண்ணீரில் இறங்கினார். 

பின்னர் அவர்கள் இருவரும் வெளியே வரமுடியாமல் நீரில் தத்தளித்தப்படி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் விடுத்தனர். 

உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தாய்-மகளை காப்பாற்ற முயன்றனர். 

அதில் ஆழமான பகுதிக்கு சென்ற குமுதா நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நந்தினியை உயிருடன் மீட்டனர். 

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story