முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழக்கரை,
தமிழகத்தில் மீண்டும் கொரானா பரவி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கீழக்கரை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பூபதி தலைமையில் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் கீழக்கரை முக்கு ரோட்டில் நின்று வாகனத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகனம் மற்றும் பஸ்களில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்யும் பயனாளி களுக்கு அபராதம் ரூ. 200 விதிக்கப்பட்டது. அதன்படி கீழக்கரையில் ஒரே நாளில் சுமார் ரூ.17 ஆயிரத்து 800 முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதித்து அதிகாரிகள் வசூல் செய்தனர். இந்த பணியில் வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் உதயகுமார், துரைராஜ், ஜெயராஜ், குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, சிவசங்கர் ஆகியோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story