தூத்துக்குடி அருகே வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்


தூத்துக்குடி அருகே வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2021 10:05 PM IST (Updated: 26 March 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடியை அருேக புதுக்கோட்டை புதுப்பச்சேரி இணைப்பு சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரில், உரிய அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து நாட்டு துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்து, புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அந்த காரில் இருந்த தூத்துக்குடி கூட்டாம்புளியைச் சேர்ந்த ஜெயராஜ், ராஜன், ஞானராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story