நிலக்கோட்டை அருகே பிரசார வேனில் இருந்த விஜயகாந்த், டி.டி.வி.தினகரன் உருவப்படம் கிழிப்பு


நிலக்கோட்டை அருகே பிரசார வேனில் இருந்த விஜயகாந்த், டி.டி.வி.தினகரன் உருவப்படம் கிழிப்பு
x
தினத்தந்தி 26 March 2021 11:08 PM IST (Updated: 26 March 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே பிரசார வேனில் இருந்த விஜயகாந்த், டி.டி.வி.தினகரன் உருவப்படத்தை வாலிபர் கிழித்ததால் பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டது.

நிலக்கோட்டை :
நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் கிராமத்தில் நேற்று அ.ம.மு.க.வினர், தே.மு.தி.க.வினர் இணைந்து கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த அபயம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 35) என்பவர் திடீரென பிரசார வாகனத்தில் இருந்த விஜயகாந்த் உருவப்படத்தையும், டி.டி.வி.தினகரன் உருவப்படத்தையும் கிழித்தெறிந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வினரும், அ.ம.மு.க.வினரும் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் அவர்கள் அ.ம.மு.க. மின்வாரிய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ரஷீத், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ஆர்.பழனி ஆகியோர் தலைமையில் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 



Next Story