பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது


பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு   மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம்  இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 26 March 2021 11:09 PM IST (Updated: 26 March 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் முருகன் கோவில் தேரோட்டம்

மயிலம், 
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவிலான மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, மாலை நேரங்களில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும், சாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி நேற்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் வீதிஉலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தோரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம்பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மலைவலக்காட்சி நடைபெற இருக்கிறது. மயிலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார். விழாவையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முத்துப்பல்லாக்கு உற்சவமும், 30-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

Next Story