வாடிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா உறுதி
வாடிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி,மார்ச்
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கு பணியாற்றும் ஒரு ஆசிரியருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சக ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கச்சைக்கட்டி அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமையில் மருத்துவ குழுவினர் 101 மாணவர்கள், 24 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதன் பின்பு பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
Related Tags :
Next Story