பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 26 March 2021 11:12 PM IST (Updated: 26 March 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

பிரதோஷ வழிபாடு

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு  16 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story