பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு
x
தினத்தந்தி 26 March 2021 11:22 PM IST (Updated: 26 March 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடந்தது.


பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமார சுவாமி எழுந்தருளினார். 
அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமார சுவாமி உலா வந்தார். பின்னர் நடந்த தங்கரத புறப்பாட்டில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு, வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர்.

Next Story