தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறு, விறுப்பாகவும், மும்முரமாகவும் நடந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் வாக்குப்பதிவிற்கு 9 நாட்களே உள்ளன. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். இதுபோல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தலில் பணியாற்றுகிற ஆசிரியர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story