வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
திண்டுக்கல்:
சட்டமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், 7 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து பாதுகாப்புடன் கொண்டுவரப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த கலெக்டர், அந்த அறைகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நில அளவை உதவி இயக்குனர் அன்புசெல்வன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.
--------
Related Tags :
Next Story