அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடமாடும் மாதிரி வாக்குச் சாவடி வாகனம். கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடமாடும் மாதிரி வாக்குச் சாவடி வாகனம். கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடமாடும் மாதிரி வாக்குச் சாவடி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு, மாவட்ட முழுவதும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனத்தில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது குறித்த விளக்க மாதிரிகள் இடம் பெற்றுள்ளது. வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளுதல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல், முக்கவசம் மற்றும் கையுறை வழங்குதல், வாக்குப் பதிவு அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் விவரங்கள் மற்றும் அடையாள அட்டை சரி பார்த்தல், கை விரலில் மை வைத்தல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களித்தல், வாக்கு உறுதி செய்யும் எந்திரத்தை பார்வையிடுதல் ஆகிய விவரங்கள் நடமாடும் மாதிரி வாக்கு சாவடி வாகனத்தில் விரிவாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணமலை மண்டல பொது மேலாளர் தசரதன் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story