கொரோனா பாதித்தவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது


கொரோனா பாதித்தவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது
x
தினத்தந்தி 26 March 2021 11:39 PM IST (Updated: 26 March 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்தவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாதுஎன்று தலைமை தேர்தல் ஆணையத்துக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த கல்வியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தொற்றுள்ள நோயாளிகளும் நேரடியாக வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கடைசி ஒரு மணி நேரம், அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
நோய்த்தொற்று உள்ளவர்கள் என்பதை அறிந்தும் அவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிப்பது என்பது பேராபத்தை விளைவிக்கும். அதே நேரத்தில் அவர்களுடைய வாக்களிக்கும் உரிமை பறிபோகக்கூடாது. கொேரானா தொற்று உள்ளவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்க அனுமதி அளிப்பதுடன், அதற்கு உரிய வழிவகைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா இன்றைக்கு அபாயகரமான தொற்றுநோயாக இருப்பதால், வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிப்பதும், வாக்குப்பதிவு எந்திரத்தை தொட அனுமதிப்பதும் நோய்த்தொற்றில்லாத வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும், பிற வாக்காளர்களுக்கும் நோயைக் கடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால், வாக்குப்பதிவு மையத்திற்குள் கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்கும் முடிவினை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story