வந்தவாசி அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்
வந்தவாசி அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்
வந்தவாசி
வாகன சோதனை
தமிழக சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும்படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமம் அருகே தனி தாசில்தார் அரிக்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆரணியில் இருந்து வந்தவாசி நோக்கி சரக்கு வாகனத்தில் வந்த மேல்மட்டை கிராமத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.51 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், உதவி தோட்ட கலை அலுவலர் சுகுமாறன் தலைமையிலான பறக்கும் படையினர் இளங்காடு கூட்டுச் சாலையில் நடத்திய வாகன சோதனையில் தின்டிவனத்திலிருந்து வந்தவாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சுரேஷ்குமார் என்பவர் ஆவணமில்லாமல் கொண்டு வந்த ரூ,.1 லட்சத்து 51 ஆயிரத்து 560-ஐ பறிமுதல் செய்தார்.
ஒப்படைப்பு
மேலும் தனி தாசில்தார் அற்புதம் தலைமையிலான பறக்கும் படையினர் நடுகுப்பம் கிராமத்தில் நடத்திய வாகன சோதனையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமில்லாமல் இருந்த 2 லட்சதது 9 ஆயிரத்்தை பறிமுதல் செய்தனர்.
3 இடங்களிலும் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 560-ஐ தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருநாவுக்கரசு விடம் ஒப்படைத்தனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, போலீஸ் ஏட்டு முருகன் அருள் தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story