வாகனசோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல்


பறிமுதல்
x
பறிமுதல்
தினத்தந்தி 26 March 2021 11:46 PM IST (Updated: 26 March 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

வாகனசோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தலையொட்டி பறக்கும் படை குழு அலுவலர் பூங்கொடி தலைமையில் போலீசார்  காரமடை அருகே புஜங்கனூர் பஸ் நிறுத்தத்தில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 அப்போது அந்த வழியே டெம்போ வேனில் வந்த பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த  அனுராத பவன் என்பவரிடம்  உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த ரூ.72 ஆயிரம்  கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் நிலை கண்காணிப்பு  குழு அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் மத்தம்பாளையம் ரோட்டில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த  கோத்தகிரி பஜார் தூனேரிபகுதியை சேர்ந்த தர்மன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த ரூ55 ஆயிரத்து  800 கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

மொத்தம் ரூ1 லட்சத்து 27 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணியிடம்ஒப்படைக்கப்பட்டது. அப்போது தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயக்குமார் உடனிருந்தார்.

Next Story