வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 31). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18-ந் தேதி வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் பனிக்குடம் உடைந்ததால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்தபடி பிறந்தது.
108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தததே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்கக்கோரி மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் வால்பாறை காந்தி சிலை பஸ்நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அனிதாவின் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story