7 சட்டமன்ற தொகுதிகளிலும் 18¾ லட்சம் வாக்காளர்கள்
7 சட்டமன்ற தொகுதிகளிலும் 18¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 12 ஆயிரத்து 943 ஆண்கள், 9 லட்சத்து 60 ஆயிரத்து 280 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 215 பேர் என மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இருந்தனர்.
அதில் பழனி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 783 பேரும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 237 பேரும், ஆத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 698 பேரும், நிலக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 863 பேரும், நத்தம் தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 616 பேரும், திண்டுக்கல் தொகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 979 பேரும், வேடசந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 பேரும் உள்ளனர்.
18,77,077 வாக்காளர்கள்
இதைத் தொடர்ந்து விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், பட்டியலில் பெயர் இருப்பவர்கள் திருத்தம் செய்யவும், இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் தகுதியானவை ஏற்கப்பட்டன. இதையடுத்து வாக்காளர் துணை பட்டியல் வெளியானது.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், மூன்றாம் பாலித்தினர் 203 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஆண்களை விட 48 ஆயிரத்து 102 பெண்கள் அதிகமாக உள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண், பெண், இதர வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
பழனி 1,35,592 1,41,587 35 2,77,214
ஒட்டன்சத்திரம் 1,17,261 1,23,924 31 2,41,216
ஆத்தூர் 1,40,273 1,51,143 26 2,91,442
நிலக்கோட்டை 1,19,723 1,24,312 9 2,44,044
நத்தம் 1,38,251 1,44,969 47 2,83,267
திண்டுக்கல் 1,34,471 1,42,057 55 2,76,583
வேடசந்தூர் 1,28,815 1,34,496 0 2,63,311
---------
Related Tags :
Next Story