பட்டமளிப்பு விழா
தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி:
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காளிராஜ், இணை செயலாளர்கள் சுப்புராஜ், வன்னியராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார்.
விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் செல்லம் பாலசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 718 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற 16 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், 2-வது இடம் பெற்ற 14 மாணவிகளுக்கு பரிசு கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story