தந்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


தந்தையை கொலை செய்த  வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 March 2021 12:39 AM IST (Updated: 27 March 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை,மார்ச்
மதுரை மாவட்டம், கள்ளிக்குடியை அடுத்த டி.அரசபட்டியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகன் செந்தில்குமார் (வயது 36). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீனாட்சி இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மீனாட்சியின் நகையையும், தனது திருமணத்தின்போது போடப்பட்ட தங்க மோதிரங்களையும் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று தந்தையிடம் செந்தில்குமார் தகராறு செய்து வந்தார்.  இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தனது தந்தையை கீழே தள்ளி, அவரது தலையில் உரல் குளவி கல்லை போட்டார். இதில் படுகாயம் அடைந்த சவுந்திரபாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வெள்ளரிப்பட்டி என்.செல்வம் ஆஜரானார். விசாரணை முடிவில், செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகலட்சுமி நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story