தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியது இந்த நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக 2 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்தனர். இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குச்சீட்டுகள்
பொள்ளாச்சி தொகுதியில் 1,528 வாக்குச்சாவடி அலுவலர் களும், வால்பாறை (தனி) தொகுதியில் 1412 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்டு கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து தலா 2 அலுவலர்கள் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர், சின்னம் கொண்ட வாக்கு சீட்டுகளை கொண்டு வந்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை வரை
இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் மற்ற தொகுதிகளுக்கு பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் இருந்து அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
வாக்கு எண்ணிக்கை நாள் வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story