கோத்தகிரி அருகே தனியார் பள்ளி மூடல்


கோத்தகிரி அருகே தனியார் பள்ளி மூடல்
x
தினத்தந்தி 27 March 2021 12:46 AM IST (Updated: 27 March 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஒரு தனியார் பள்ளி மூடப்பட்டது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் 110 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மூடப்பட்டு, வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Next Story