ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை: கள்ளக்காதலியின் மகன் நண்பனுடன் கைது


ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை: கள்ளக்காதலியின் மகன் நண்பனுடன் கைது
x
தினத்தந்தி 27 March 2021 1:09 AM IST (Updated: 27 March 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியின் மகன் நண்பனுடன் கைது

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள உத்திரகுடி காவல் ஊராட்சி மன்ற 7-வது வார்டு உறுப்பினராக இருந்தவர் பெருமாள் (வயது 45). வெட்டுக்காடுப் பகுதியை சேர்ந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண்ணின் 17 வயது மூத்த மகன் சில தினங்களுக்கு முன்பு பெருமாளை வெட்டுக்காடு பஸ் நிறுத்தத்தில் சரமாரியாக வெட்டிக் கொன்றான். அப்போது அவன் தப்பிச் செல்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அவனது நண்பர் சரத்குமார் (வயது 20)  உதவி செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக தலைமறைவாகி இருந்தனர். நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story