தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2021 1:38 AM IST (Updated: 27 March 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நொய்யல்
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). இவர் கோவில்களில் விசேஷ நாட்களில் பம்பை அடிப்பது வழக்கம். கூலி வேலைக்கும் சென்று வந்தார். திருமணமான இவருக்கு சத்யா (28) என்கிற மனைவியும், 6 வயதில் தர்வேஷ் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சக்திவேல், கடந்த 2 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்துள்ளார். மேலும், மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் மதுகுடிப்பதற்கு சத்யாவிடம் பணம் கேட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில், கதவை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சக்திவேல் தூக்குப்போட்டு கொண்டார். இதை ஜன்னல் வழியாக பார்த்த சத்யா, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து சக்திவேலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் சத்யா கொடுத்த புகாரின்ேபரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story