நாங்குநேரி ஊருக்குள் வராமல் செல்ல முயன்ற தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
நாங்குநேரி ஊருக்குள் வராமல் செல்ல முயன்ற தனியார் பஸ்சை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
நாங்குநேரி, மார்ச்:
நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக வள்ளியூர், களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அது முறையாக இயக்கப்படாமல் வழித்தடத்தை மாற்றி நாங்குநேரி ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ் நிறுவனத்துக்கும், அரசு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று காலை அந்த தனியார் பஸ் ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு செல்லும் வழியில் நாங்குநேரி ஊருக்குள் வராமல் இசக்கியம்மன் கோவில் முன்பு செல்ல முயன்றது. இதனை அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் சிலர் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினர்.
மேலும் நாங்குநேரி தாலுகாவில் முறையாக அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே அனைத்து பஸ்களையும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story