நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் வருசாபிஷேகம்


நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் வருசாபிஷேகம்
x
தினத்தந்தி 27 March 2021 2:17 AM IST (Updated: 27 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.

நெல்லை, மார்ச்:
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சண்முகருக்கு வருசாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி சுப்பிரமணியர் நெல்லை டவுனுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்பணி முக்கில் சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பேட்டை காட்சி மண்டபத்தில் காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story