சுல்தான்பேட்டையில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


சுல்தான்பேட்டையில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 2:24 AM IST (Updated: 27 March 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தனர்.

சுல்தான்பேட்டை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை யினர் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரிபுதூர், ஜே.கிருஷ்ணாபுரம், சாலைப்புதூர் ஆகிய இடங் களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளை சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஸ்வரோசி சாசோமவன்சி ஆய்வு செய்தார்.

அப்போது தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குசாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகவும், முழுமையாக வும் இருக்கவேண்டும் என உத்தரவிட்டார். 

இதைதொடர்ந்து ஜல்லி பட்டியில் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story