தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு


தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 2:24 AM IST (Updated: 27 March 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அரிநிஷா பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி அரிநிஷா பிரியதர்ஷினி, நேற்று குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு, குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

பின்னர் நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி அரிநிஷா பிரியதர்ஷினி, அங்குள்ள தீயணைப்பு கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேரிடர் காலத்தில் இரவு நேரத்தில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் ராட்சத மின் விளக்குகள், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் கருவிகள், பாம்பு பிடிக்கும் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, காண்பித்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் எவ்வாறு துரிதமாக செயல்படுவது என்பது குறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி அரிநிஷா பிரியதர்ஷினி விளக்கி கூறினார்.

Next Story