தேர்தல் விழிப்புணர்வு வாகன பேரணி
விக்கிரமசிங்கபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் அன்னை ஜோதி சேவா டிரஸ்டின் மூலமாக நடைபெற்ற இந்த பேரணியை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிவந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் தொடங்கி அடையக்கருங்குளம் சேவா டிரஸ்டில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சந்தானலட்சுமி அனைவரையும் வரவேற்றார். அன்னை ஜோதி சிறப்புப்பள்ளியின் நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story