பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 2:34 AM IST (Updated: 27 March 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேரில் ஆய்வு செய்தாா்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. பூசாரி மட்டுமே தீ மிதிக்கிறார். அதன்பின்னர் குண்டம் மூடப்படும். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் மட்டும் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு்ள்ளது.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் தங்கதுரை நேற்று பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நேரில் சென்றார். அப்போது அவர் பக்தர்கள் வந்து செல்லும் போது எந்தவித இடையூறும் இல்லாமல் தடுப்பு அரண்கள் அமைப்பது, வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களை பார்வையிட்டு்  ஆய்வு செய்தார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள், சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டுடன் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சென்றனர்.

Next Story