பள்ளிக்கூடத்துக்கு உபகரணங்கள்
பனவடலிசத்திரம் பகுதியில் பள்ளிக்கூடத்துக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பனவடலிசத்திரம், மார்ச்:
பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள பலபத்திரராமபுரம், வடக்கு பனவடலி, ஊத்துமலை, மேலஇலந்தைகுளம், மாவிலியூத்து, சுண்டன்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மாணவர்கள் கல்வி உபகரணங்கள் தட்டு, டம்ளர், விளையாட்டு பொருட்கள் வழங்குதல் மாறாந்தை இந்து தொடக்கப்பள்ளி, மருக்காலங்குளம் சுவாமி விவேகானந்தா தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மேஜை, டெஸ்க் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சுஸ்லான் திட்ட மேலாளர் முருகன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மமிதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story