அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்- வைகோ பிரசாரம்
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என திருவேங்கடத்தில் வைகோ பிரசாரம் செய்தார்.
திருவேங்கடம், மார்ச்:
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திருவேங்கடத்தில் வைகோ பிரசாரம் செய்தார்.
வைேகா பிரசாரம்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவேங்கடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவேங்கடம் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு. விவசாயிகளுக்கு எதிராக மோடி வேளாண் சட்டத்தை கொண்டு வந்தார். அந்த சட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு தெரிவித்தார். அவர் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி ஒட்டுமொத்தமாக அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
கூட்டு குடிநீர் திட்டம்
மேலும், திருவேங்கடம் தாலுகா இன்னும் சில ஆண்டுகளில் முன்னேறி பெரிய நகரமாக உருவாகும். அப்போது இப்பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதை செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக திருவேங்கடம், செல்லபட்டி, புதுப்பட்டி, கீழத்திருவேங்கடம், ஆவுடையாபுரம் ஆகிய திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும், மேலும், அதை விரிவுபடுத்தி அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் குரல் கொடுக்கவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு தீர்வு காணவும் நீங்கள் ராஜாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
இதைத்தொடர்ந்து அவர் கடையநல்லூர் ெதாகுதி இ்ந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கரை ஆதரித்து கடையநல்லூரிலும், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாரை ஆதரித்து சுரண்டையிலும் பிரசாரம் செய்தார். பிரசார நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story