வாக்குப்பதிவு மையங்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி; கலெக்டர் பார்வையிட்டார்
வாக்குப்பதிவு மையங்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
ஈரோடு
சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் தலைமையில் அதிகாரிகள் முன்ஏற்பாடு பணிகள் செய்து வருகிறார்கள். தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி நடந்து வருகிறது. இதுபோல் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்கவும், பணியில் இருக்கும் வாக்குச்சாவடி அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும் பாதுகாப்பு உபகரணங்கள் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான முகக்கவசம், சானிடைசர், கையுறைகள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் இருந்து இந்த பொருட்கள் லாரிகள் மூலம் தொகுதிவாரியாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று பார்வையிட்டார்.
Related Tags :
Next Story