ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் யானையால் பொதுமக்கள் பீதி


ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் யானையால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 27 March 2021 3:00 AM IST (Updated: 27 March 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட  நெருப்பூர், முத்தையன் கோவில் காடு, ஒட்டனூர், காட்டூர் ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் ஒன்றை யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை இரவு நேரங்களில் வெளியே வந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியவில்லை. ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறினர்.

Next Story