நாய்கள் கடித்ததில் மான் செத்தது


நாய்கள் கடித்ததில் மான் செத்தது
x
தினத்தந்தி 27 March 2021 3:05 AM IST (Updated: 27 March 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் செத்தது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டில் மான்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று அந்த காட்டில் இருந்து இரண்டரை வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புள்ளிமான் அங்குள்ள வயல்வெளி பகுதிகளுக்கு அருகே இரை தேடி வந்துள்ளது. அப்போது மானை கண்ட தெரு நாய்கள், அந்த மானை துரத்திச்சென்று கடித்தன. இதனைக்கண்ட அப்பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நாய்களிடம் இருந்து புள்ளிமானை மீட்டனர். அந்த வழியாக வந்த ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், இது பற்றி சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வனத்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே, மயங்கி கிடந்த புள்ளிமான் ெசத்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புள்ளிமானை கைப்பற்றி ஸ்ரீபுரந்தான் அரசு விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர் மானை புதைத்ததாக தெரிவித்தனர்.

Next Story