திருச்சிக்கு வந்த ஜே.பி.நட்டாவை சந்திக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
திருச்சிக்கு வந்த ஜே.பி.நட்டாவை சந்திக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
செம்பட்டு,
திட்டக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்திலும், மத்திய உள்துறை இணைமந்திரி கிஷன் ரெட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். அப்போது அவர்களை சந்திக்க, விமான நிலைய முக்கியஸ்தர்கள் அறைக்கு செல்ல தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்தி தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் முக்கிய பிரமுகர்கள் அறைக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டி வெளியே வந்து வெல்லமண்டி நடராஜனை சந்தித்து சால்வை அணிவித்து பேசிக்கொண்டிருந்தார்.
பின்பு மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரை அறைக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர். அங்கு ஜே.பி. நட்டாவை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story