சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 March 2021 4:06 AM IST (Updated: 27 March 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 45 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 பேர், ஓமலூர், சங்ககிரி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஆத்தூர், நங்கவள்ளி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
20 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 242 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 262 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story